Home Featured இந்தியா மோசடி வழக்கு: ப.சிதம்பரம் மனைவிக்கு சி.பி.ஐ அழைப்பாணை!

மோசடி வழக்கு: ப.சிதம்பரம் மனைவிக்கு சி.பி.ஐ அழைப்பாணை!

667
0
SHARE
Ad

chidambaramகொல்கத்தா – மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக மத்திய முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்துக்கு சிபிஐ அழைப்பாணை அனுப்பியுள்ளது.

மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு வரும் 10ஆம் தேதி விசாரணைக்கு வருமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இதுதொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தை தொடர்புகொண்டு கேட்டபோது, அழைப்பாணை எதுவும் நளினிக்கு அனுப்பவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

முன்னதாக, சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 6-ஆவது துணை குற்றப்பத்திரிகையில் நளினியின் பெயரையும் சிபிஐ குறிப்பிட்டிருந்தது.