Home Featured உலகம் ஏமனில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல்! இந்தியர்கள் 4 பேர் உள்பட 16 பேர் பலி!

ஏமனில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல்! இந்தியர்கள் 4 பேர் உள்பட 16 பேர் பலி!

577
0
SHARE
Ad

yemen-blastsசனா – ஏமன் நாட்டில் உள்ள முதியோர் இல்லத்தில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த 4 செவிலியர்கள் உள்பட 16 பேர் கொல்லப்பட்டனர். ஏடன் நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் இந்தியாவைச் சேர்ந்த 4 பெண்கள் செவிலியர்களாக பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் துப்பாக்கிய ஏந்திய 4 தீவிரவாதிகள் முதியோர் இல்லத்தில் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். முதியோர் இல்லத்தின் பாதுகாவலரை சுட்டுக் கொன்ற அவர்கள், பின்னர் இல்லத்துக்குள் நுழைந்து அங்கு இருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.

yemen-attackஇதில் அங்கு பணியாற்றி வந்த 4 இந்திய செவிலியர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். முதலில் 4 செவிலியர்களை தனியே பிரித்து சுட்டுக் கொன்றனர், பிறகு மற்ற முதியோர்களைக் கையைக் கட்டி நிறுத்தி துப்பாக்கியால் சுட்டு கொலை வெறித்தாக்குதல் நடத்தினர்.

#TamilSchoolmychoice

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதலை நடத்தியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.