Home Featured நாடு எம்எச்370: ரீயூனியன் வாசி கண்டறிந்துள்ள புதிய பாகத்தில் நீல நிறக் குறியீடுகள்!

எம்எச்370: ரீயூனியன் வாசி கண்டறிந்துள்ள புதிய பாகத்தில் நீல நிறக் குறியீடுகள்!

887
0
SHARE
Ad

FRANCE-OVERSEAS-MALAYSIA-CHINA-AUSTRALIA-MH370-AVIATION-SEARCHகோலாலம்பூர் – எம்எச்370 விமானத்தின் முதல் பாகம் கண்டறியப்பட்ட அதே ரீயூனியன் தீவில், நேற்று இரண்டாவது நம்பத்தகுந்த பாகம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் ரீயூனியன் தீவைச் சேர்ந்தவரான ஜானி பெக் என்பவர் தான் கடற்கரையைச் சுத்தம் செய்து கொண்டிருந்த போது, விமானத்தின் இறக்கையின் ஒரு பகுதியைக் கண்டறிந்தார்.

இந்நிலையில், அதே நபர் நேற்று மீண்டும் ஒரு சந்தேகத்திற்குரிய பாகத்தைக் கண்டறிந்துள்ளதாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

கடற்கரையில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது, 8க்கு 15 அங்குல அளவிலான பாகம் ஒன்றைப் பார்த்ததாகவும், அந்தப் பாகத்தின் மேற்பரப்பில் நீல நிற குறியீடுகளும், பழுப்பு நிற கோடுகளும் இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம், அமெரிக்காவைச் சேர்ந்த புலன்விசாரணை ஆர்வலர் ஒருவர் தன்னிச்சையாக தேடுதல் பணிகளை மேற்கொண்டு மொசாம்பிக் தீவில் விமானத்தின் பாகம் ஒன்றைக் கண்டறிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.