Home Featured இந்தியா சொத்துக்களை விற்றாவது வங்கி கடனை அடைப்பேன் – விஜய் மல்லையா விளக்கம்!

சொத்துக்களை விற்றாவது வங்கி கடனை அடைப்பேன் – விஜய் மல்லையா விளக்கம்!

516
0
SHARE
Ad

vijay malliyaபெங்களூரு – வங்கியில் வாங்கிய ரூ.7,800 கோடியை திருப்பி செலுத்துவது குறித்து தொழிலதிபர் விஜய் மல்லையா விளக்கம் அளித்துள்ளார். எனது சொத்துக்களை விற்றாவது வங்கி கடனை அடைப்பேன் என்று விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

சட்டத்தை மதிக்கும் நான் இந்தியாவை விட்டு ஓடிவிட மாட்டேன் என்று விஜய் மல்லையா கூறியுள்ளார். தொழிலதிபர் விஜய் மல்லையா வங்கி கடன் பாக்கி வழக்கில் கடன் வசூலிப்பு தீர்ப்பாயம் இன்று தீர்ப்பு அளிக்கிறது.

மல்லையாவின் கிங்ஃபிஷர் நிறுவனம் வங்கிகளில் ரூ.7,800 கோடி கடன் பெற்றது. கடனை திருப்பி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவிடக் கோரி ஸ்டேட் வங்கி வழக்கு தொடர்ந்தது. ஸ்டேட் வங்கியின் வழக்கை பெங்களூரில் உள்ள கடன் வசூல் தீர்ப்பாயம் விசாரித்தது.