Home Featured இந்தியா கடனுக்காக மனைவியை ஒரு இலட்சம் ரூபாயிக்கு ஃபேஸ்புக்கில் விற்க முயன்ற கணவர்!

கடனுக்காக மனைவியை ஒரு இலட்சம் ரூபாயிக்கு ஃபேஸ்புக்கில் விற்க முயன்ற கணவர்!

738
0
SHARE
Ad

facebookஇந்தூர் – மத்தியபிரதேசத்தில் கடனை அடைப்பதற்காக ஃபேஸ்புக் மூலம் மனைவியை ரூ.1 லட்சத்துக்கு விற்க முயன்றுள்ளார் அவரது கணவர். தற்போது, மனைவியின் புகாரை தொடர்ந்து, தலைமறைவான கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

மத்தியபிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் திலீப் மாலி (30). இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்துக்கு பிறகு, மனைவியுடன் இந்தூரில் குடியேறி இருக்கிறார் திலீப் மாலி. இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

திலீப், நண்பர்கள், தெரிந்தவர்கள் என பலரிடம் கடன் வாங்கி, திரும்பச் செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில், கடன் கொடுத்தவர்களின் தொல்லை, மிரட்டல்கள் எல்லைமீறி செல்ல அவர் தனது வீட்டை காலி செய்துவிட்டு சொந்த கிராமத்துக்கு சென்று இருக்கிறார்.

#TamilSchoolmychoice

அவருடைய மனைவியும், தன் குழந்தையுடன் தாய் வீட்டிற்கு கிளம்பி சென்று இருக்கிறார். இந்நிலையில், கடனை அடைப்பதற்காக, தன் மனைவியை ரூ.1 லட்சத்துக்கு விற்க தயாராக இருப்பதாகவும், விருப்பம் உள்ளவர்கள் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்றும் ‘ஃபேஸ்புக்’கில் தனது செல்பேசி எண்ணுடன் திலீப் மாலி விபரீதமாக விளம்பரம் செய்திருக்கிறார்தார்.

அந்த விளம்பரத்துடன் தனது மனைவி மற்றும் குழந்தையின் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டிருக்கிறார். உறவினர்கள் மூலம் இந்த விளம்பரத்தை பற்றி அறிந்த திலீப் மாலியின் மனைவி, அதிர்ச்சியும் வேதனையும் அடைந்திருக்கிறார்.

உடனே நேற்று காவல் நிலையத்திற்கு சென்ற அவர், ”என்னையும், எனது குடும்பத்தினரையும் இழிவுபடுத்துவதற்காகவே எனது கனவர் முகநூலில் பதிவு செய்துள்ளார்.

மேலும், கடன் தொல்லை காரணமாக என் கணவர் இந்தூரில் இருந்து அவருடைய சொந்த கிராமத்துக்குத் தப்பிச் சென்றுவிட்டர்” என்று புகார் அளித்து இருக்கிறார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள திலீப் மாலியை தேடி வருகிறார்கள்.