Home Featured தமிழ் நாடு கனிந்து வரும் பழம் “விஜயகாந்துக்காக” இன்னும் காத்திருக்கும் கருணாநிதி!

கனிந்து வரும் பழம் “விஜயகாந்துக்காக” இன்னும் காத்திருக்கும் கருணாநிதி!

929
0
SHARE
Ad

Karunanithi-சென்னை – பாஜக கூட்டணியை முடிவு செய்வதற்காக விஜயகாந்தின் தேமுதிக கட்சியின் முக்கியத் தலைகள் புதுடில்லியில் முகாமிட்டிருப்பதாகத் தகவல்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், இன்று சென்னையில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி, விஜயகாந்துடன் கூட்டணி ஏற்படும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்திருக்கின்றார்.

தேமுதிக கூட்டணி பேச்சு வார்த்தை எந்த நிலையில் உள்ளது என்ற கேள்விக்குப் பதிலளித்த கருணாநிதி “பழம் கனிந்து வருகிறது. பாலில் எப்போது விழும் என்று இன்னும் முடிவாகவில்லை” என்று கூறியிருக்கின்றார்.

தொடர்ந்து தே.மு.தி.க . கூட்டணி ஏற்படும் என இன்னும் நம்பிக்கை உள்ளதா என்ற கேள்விக்கு, “நிச்சயமாக இருக்கிறது” என்றும் பதிலளித்துள்ளார் கருணாநிதி.

#TamilSchoolmychoice

ஆனால் ஏன் இன்னும் இழுபறி நீடிக்கிறது, தேமுதிக என்ன கோரிக்கை வைக்கின்றனர் என்ற பத்திரிக்கையாளர்கள் கேள்விக்கு மட்டும் “ஒன்றும் சொல்வதற்கில்லை” என மழுப்பலாகத் தெரிவித்துள்ளார் கருணாநிதி.

விஜயகாந்த் கனிந்து வருவாரா, கனிந்து கலைஞரின் கிண்ணத்தில் உள்ள பாலில் விழுவாரா அல்லது பாஜக விரிக்கும் வலையில் விழுவாரா என்பதைத் தெரிந்து கொள்ள தமிழ்நாடும் காத்திருக்கின்றது.