Home Featured தமிழ் நாடு மக்கள் நலக் கூட்டணியின் இணைய-சமூக வலைத் தளங்கள் தொடக்கி வைக்கப்பட்டன!

மக்கள் நலக் கூட்டணியின் இணைய-சமூக வலைத் தளங்கள் தொடக்கி வைக்கப்பட்டன!

1059
0
SHARE
Ad

சென்னை – இன்றைய நிலையில், தமிழக அரசியலில் களத்தில் முன்னணியில் நிற்கும் அணி என்றால் அது மக்கள் நலக் கூட்டணிதான்.

மற்ற கட்சிகளெல்லாம், கூட்டணிக்காக காத்துக் கிடக்கும் நிலையில், நான்கு கட்சிகள் ஒன்றிணைந்து, அதன் நான்கு தலைவர்களும், ஒரு சேர பிரச்சாரம் மேற்கொள்வதும், உறுதியுடனும், தெளிவுடனும் மக்கள் பிரச்சனைகளை முன்வைத்து, மக்களைச் சந்திப்பதும் – தேர்தலில் வாக்குகளைக் கொண்டு வருமோ இல்லையோ – தமிழக அரசியலைப் பொறுத்தவரை ஒரு திருப்பு முனையை உருவாக்கியுள்ளது.

Makkal nala coalition-launch-website-facebookமக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் இணைந்து  அந்தக் கூட்டணியின் இணைய-சமூக வலைத் தளங்களை இன்று தொடக்கி வைத்தபோது…

#TamilSchoolmychoice

இந்நிலையில், மக்கள் நலக்கூட்டணியின் இணையத் தளம் மற்றும் அதன் சமூக வலை தளப் பக்கங்கள் எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. அலுவலகத்தில் இன்று அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.

மக்கள் நலக்கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ராமகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சிச் செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் ஒருங்கிணைந்து கூட்டாக இதைத் தொடங்கி வைத்தனர்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த வைகோ, இன்று முதல் இணைய தளத்திலும், சமூக வலைத் தளங்களிலும் மக்கள் நலக்கூட்டணியின் செயல்பாடுகள், அறிக்கைகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பார்க்கலாம் எனக் கூறினார்.

மக்கள் நலக்கூட்டணி இணைய தள முகவரி:–

www.makkalnalan.in

முகநூல் www.facebook.com/ makkalnalan2016,

டுவிட்டர் www.twitter.com / makkal nalan2016,

யூடியூப் www.youtube.com/ makkalnalan 2016,

இ–மெயில் makkalnalantn@ gmail.com

வாட்ஸ் ஆப் எண். 73052 34234.