Home Featured நாடு “நீதிமன்றத்தில் நிறுத்தி என்னிடம் கேள்வி கேளுங்கள்” – மகாதீர் கூறுகின்றார்!

“நீதிமன்றத்தில் நிறுத்தி என்னிடம் கேள்வி கேளுங்கள்” – மகாதீர் கூறுகின்றார்!

501
0
SHARE
Ad

Tun Mahathirகோலாலம்பூர் – காவல்துறை தன்னை விசாரணை செய்ய வேண்டும் என்றால், நீதிமன்றத்தில் வைத்து விசாரணை செய்யட்டும் என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

தலைமை வழக்கறிஞர் அபாண்டி அலி குறித்து தான் கூறிய கருத்து தொடர்பில், காவல்துறை தன்னை எப்படி விசாரணை செய்தது என அண்மையில் ‘த டெலிகிராஃப்’ என்ற பத்திரிக்கைக்கு மகாதீர் பேட்டியளித்துள்ளார்.

அதில், “காவல்துறை எனது அலுவலகத்திற்கு வந்தது. ஆனால் நான் அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்துவிட்டேன்”

#TamilSchoolmychoice

“என்னிடம் கேள்வி கேட்பதாக இருந்தால் நீதிமன்றத்தில் நிறுத்தி கேள்வி கேளுங்கள், அங்கு தான் நான் பேசுவது எல்லோருக்கும் கேட்கும். அப்போது தான் எனது வழக்கறிஞர்களும் கேள்வி கேட்க முடியும் என்று அவர்களிடம் கூறினேன்” என்று மகாதீர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டால் கவலையடைவீர்களா? என்ற கேள்விக்கு, “அப்படி நான் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டால், நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். அவர்கள் என்னை மிரட்டல் மூலமாக கட்டுப்படுத்த முயற்சி செய்கிறார்கள், ஆனால் நான் அதற்கும் தயார் தான்” என்று 90 வயதான மகாதீர் துணிச்சலோடு தெரிவித்துள்ளார்.