Home Featured நாடு பேரரசரை அவமதித்ததாக கிட் சியாங், மாட் சாபு, மலேசியாகினி மீது புகார்!

பேரரசரை அவமதித்ததாக கிட் சியாங், மாட் சாபு, மலேசியாகினி மீது புகார்!

622
0
SHARE
Ad

picகோலாலம்பூர் – அரசாங்கம் தயாரித்துக் கொடுத்த உரையைத் தான் பேரரசர் (Yang di-Pertuan Agong) வாசித்தார் என்ற கருத்தைத் தெரிவித்த ஜசெக மூத்த தலைவர் கிட் சியாங் மீதும், அமானா தலைவர் முகமட் சாபு மீதும், அதனை வெளியிட்ட மலேசியாகினி இணையதளம் மீதும் காவல்துறையில் தனித்தனியே மூன்று புகார்கள் செய்யப்பட்டுள்ளன.

நேற்று ‘Kerajaan sediakan titah Agung, kata Kit Siang’ (பேரரசரின்  உரையை அரசாங்கம் தான் தயாரித்துக் கொடுத்தது – கிட்  சியாங்  கருத்து) என்ற தலைப்பில் மலேசியாகினி வெளியிட்டிருந்த கட்டுரை தொடர்பில் இன்று செந்துல், வாங்சா மாஜு, ரவாங் ஆகிய மூன்று இடங்களிலுள்ள காவல்நிலையங்களில் தனித்தனியே புகார்கள் செய்யப்பட்டுள்ளன.

புகார் அளித்தவர்களில் ஒருவரான முகமட் கைருல் அசாம் அப்துல் அசீஸ் என்பவர், செந்துல் காவல்நிலையத்தில் புகார் அளித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசுகையில், “அச்செய்தியைப் படித்த போது பேரரசரை அவமானப்படுத்தும் விதமாக இருந்ததை உணர்ந்தேன். அக்கருத்தைத் தெரிவித்த லிம் கிட் சியாங், மாட் சாபு மற்றும் அதை வெளியிட்ட மலேசியாகினி இணையதளம் ஆகியோர் பேரரசரை அவமதிக்கும் நோக்கில் தான் இதை செய்துள்ளதாக நான் எண்ணுகின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

படம்: மலேசியாகினி