Home Featured தமிழ் நாடு “ஊழல் நஞ்சு கலந்த திமுக பாலில் விழுந்து விடாதீர்கள்” விஜயகாந்துக்கு, வைகோ எச்சரிக்கை!

“ஊழல் நஞ்சு கலந்த திமுக பாலில் விழுந்து விடாதீர்கள்” விஜயகாந்துக்கு, வைகோ எச்சரிக்கை!

590
0
SHARE
Ad

சென்னை – “தே.மு.தி.க.வை தி.மு.க. கூட்டணிக்கு இழுப்பது பற்றி இன்று கருணாநிதி கூறும்போது, பழம் கனிந்து கொண்டிருக்கிறது. எப்போது பாலில் விழும் என்று காத்திருக்கிறோம் என கூறியிருக்கிறார். பழம் நழுவி தூய்மையான பாலில் விழ வேண்டும். ஆனால் தி.மு.க. ஊழல் நஞ்சு கலந்த பால். அதில் விழுந்து விடக்கூடாது. விஜயகாந்த் ஏமாந்து விடக்கூடாது” என வைகோ எச்சரித்துள்ளார்.

Vaiko-makkal nalan coalition-website launchமக்கள் நலக் கூட்டணியின் இணைய-சமூக வலைத் தளங்களை இன்று அந்தக் கூட்டணித் தலைவர்கள் தொடக்கி வைத்தபோது….

நேற்று, மக்கள் நலக் கூட்டணியின் இணைய மற்றும் சமூக வலைத் தளங்களைத் தொடக்கி வைத்தபோது, பத்திரிக்கையாளர்களிடம் பேசியபோது வைகோ இவ்வாறு கூறினார்.

#TamilSchoolmychoice

“மீண்டும் அ.தி.மு.க.வை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் எங்கள் நோக்கம். 22 மாவட்டங்களில் 3 கட்ட பிரசாரத்தை முடித்துள்ளோம். தற்போது தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. அது முடிந்ததும் 4–வது கட்ட பிரசாரத்தை மேற்கொள்வோம்” என்றும் வைகோ மேலும் கூறியுள்ளார்.

அதே வேளையில் தேர்தல் அறிக்கை விவரங்களை இப்போது சொல்ல முடியாது என்றும் வைகோ கூறியுள்ளார்.

“எங்கள் கூட்டணியின் குறைந்தபட்ச செயல் திட்ட அடிப்படையில் தேர்தல் அறிக்கை அமையும். எங்கள் கூட்டணிக்கு அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜனதா, பா.ம.க., காங்கிரஸ் ஆகிய 5 கட்சிகளையும் தவிர எந்த கட்சி வேண்டுமானாலும் வரலாம். த.மா.கா.வை எங்கள் கூட்டணிக்கு அழைத்துள்ளோம். இதுவரை அவர்கள் முடிவெடுக்கவில்லை” என்றும் வைகோ அறிவித்துள்ளார்.

“மக்கள் நலக்கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்தால் முதல்வர் பதவி அறிவிக்கும் நிலைப்பாட்டில் மாற்றம் வருமா?” என்ற கேள்விக்கு பதிலளித்த வைகோ “இது ஒரு யுத்த களம். இதில் வியூகங்கள் எப்படி வேண்டுமானாலும் அமையும். அதை இப்போது கூற முடியாது” என பதிலளித்துள்ளார்.

இதற்கிடையில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க தேமுதிக தலைவர்கள் டில்லியில் முகாமிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.