Home Featured தமிழ் நாடு அன்னியச் செலாவணி மோசடி: சசிகலாவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

அன்னியச் செலாவணி மோசடி: சசிகலாவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

581
0
SHARE
Ad

V.K. Sasikala,சென்னை – தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு எதிராக, மத்திய அமலாக்கத் துறை தொடுத்த அன்னியச் செலாவணி மோசடி தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

அன்னியச் செலாவணி மோசடி (எஃப்.இ.ஆர்.ஏ.) செய்ததாக சசிகலா மீது மத்திய அமலாக்கத் துறை கடந்த 1996 ஆம் ஆண்டில் வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில், சசிகலாவுக்கு சாதகமாக சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, மத்திய அமலாக்கத் துறை உச்ச நீதிமன்றத்தில் 2009-இல் மேல்முறையீடு செய்தது.

இது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், பிரஃபுல்லா சி.பந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

#TamilSchoolmychoice

அப்போது, இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து, நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், ”இந்த வழக்கு மிகவும் தாமதமாகத் தொடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அமலாக்கத் துறை தரப்பில் மேல்முறையீட்டு மனுவுடன் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிரூபிக்க உரிய ஆவணங்கள் இல்லை. அதனால், அமலாக்கத் துறையின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளனர்.