சிமி அப்துல் கனி ஜோகூர் மாநில எம்ஏசிசி இயக்குநராக பொறுப்பேற்கவுள்ளார். சிலாங்கூரில் அவர் வகித்த பொறுப்பை எம்ஏசிசி முகமையின் நேர்மை மேலாண்மைப் பிரிவு இயக்குநர் நோராஸ்லான் ரசாலி ஏற்கிறார்.
இதனிடையே, புத்ராஜெயா எம்ஏசிசி இயக்குநர் மோ சம்சுதின் யூசோப், கிளாந்தான் எம்ஏசிசி இயக்குநராக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கிளந்தான் எம்ஏசிசி இயக்குநர் அப்துல் அசிஸ் அபான் புத்ராஜெயா எம்ஏசிசி இயக்குநராக பொறுப்பேற்கிறார்.
எம்ஏசிசி பொதுத்துறை ஆட்சிமுறை பிரிவின் இயக்குநர் ஜுனிபா வான்டி, நேர்மை மேலாண்மைப் பிரிவு இயக்குநராகப் பொறுப்பேற்கிறார்.
ஜோகூர் எம்ஏசிசி துணை இயக்குநர் அஸ்மி அலியாஸ் மலாக்கா எம்ஏசிசி இயக்குநராகப் பொறுப்பேற்கிறார் என்ற அறிக்கை கூறுகின்றது.