கொச்சின் – மனித முகம் கொண்ட அபூர்வ வகை மீன் ஒன்று கேரளாவில் மீனவர் ஒருவர் வலையில் சிக்கியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடியப்பட்டினம் கிராமத்தில் வசித்து வருபவர் கடிகை அருள்ராஜ்.
நாவல் ஆசிரியரான இவர், கேரளா மாநிலம் முனம்பம் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக மீன்பிடி தொழில் செய்து வருகிறார். கடந்த எட்டு நாட்களுக்கு முன்பு அருள்ராஜ், ஆழ்கடல் பகுதிக்கு மீனவர்களுடன் மீன்பிடி சென்றுள்ளார்.
இன்று காலை படகுடன் அருள்ராஜ் கரை திரும்பினார். அப்போது, அவரது வலையில் மனித உருவம் கொண்ட அபூர்வ வகை மீன் ஒன்று சிக்கியது.பேத்தை வகையை சேர்ந்த இந்த மீன், நான்கு வகைகளை கொண்டது.
இந்த மீன்களை சாப்பிடவோ, வளர்க்கவோ முடியாதாம். ஆழ்கடலில் வாழும் ஓர் அரிய வகை மீன் இனம் ஆகும். மனித உருவம் கொண்ட இந்த அபூர்வ வகை மீன் அந்த பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.