Home Featured உலகம் கத்தாரில் பரபரப்பான சாலையில் புலி சுற்றியதால் மக்கள் அதிர்ச்சி! (காணொளியுடன்)

கத்தாரில் பரபரப்பான சாலையில் புலி சுற்றியதால் மக்கள் அதிர்ச்சி! (காணொளியுடன்)

852
0
SHARE
Ad

tigerதோஹா – கத்தாரின் தோஹா நகரின் பரபரப்பான சாலையில் புலி சுற்றியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தோஹா நகரில் உள்ள எக்ஸ்பிரஸ் ரயில் ஓடும் பாதையில் இருந்து புலி ஒன்று சாலையில் விழுந்தது. சாலையில் வாகனங்கள் வரிசையாக நிற்கையில் அந்த புலி அந்த இடத்தை விட்டு வெளியேற வழி தேடி ஓடியது.

சாலையில் புலி ஓடி வந்ததை பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் சப்தமில்லாமல் காருக்குள் இருந்தனர். அந்த புலி சாலையில் ஓடி வந்தபோது எடுக்கப்பட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது.

அந்த புலி பிடிக்கப்பட்டு அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. வளைகுடா நாடுகளில் உள்ள பணக்காரர்கள் புலிகளை செல்லப் பிராணிகளாக வளர்க்கிறார்கள். அத்தகைய செல்லப்பிராணி புலி தான் சாலையில் சுற்றித் திரிந்தது என்று கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice