Home Featured நாடு வெடிகுண்டு பீதியை ஏற்படுத்திய ஜாடிகள் – பெட்ரோசயின்ஸ் நிர்வாகம் வருத்தம்!

வெடிகுண்டு பீதியை ஏற்படுத்திய ஜாடிகள் – பெட்ரோசயின்ஸ் நிர்வாகம் வருத்தம்!

766
0
SHARE
Ad

Bombகோலாலம்பூர் – மாணவர்களுக்கு தாங்கள் அறிவியல் சோதனைக்காக வழங்கிய இரண்டு கண்ணாடி ஜாடிகள், நேற்று தலைநகரில் வெடிகுண்டு பீதியை ஏற்படுத்தியதற்காக பெட்ரோசயின்ஸ் நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பெட்ரோசயின்ஸ் நிர்வாகம் தங்களது பேஸ்புக் பக்கத்தில் இன்று வெளியிட்டிருந்த அறிக்கையில், “பெட்ரோசயின்சின் சிறிய ஸ்டார்லேப் பயிற்சி வகுப்பிற்கு வருகை புரிந்த ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு, பயிற்சிக்காக வழங்கப்பட்ட பொருட்களில் ஒன்று தான் அந்த இரண்டு ஜாடிகளும்”

“அந்த ஜாடிகளை வீட்டிற்கு எடுத்துச் செல்ல நாங்கள் அனுமதி வழங்கியிருந்தோம். விண்மீன் முறைகள் குறித்து விளக்கும் வகையில் அதில் எல்இடி விளக்குகளும், மின்கலன்களும் இணைக்கப்பட்டிருந்தன. அன்றைய நாளில் நடந்த ஒட்டுமொத்த பயிற்சி வகுப்பில் இந்தப் பொருட்களும் பயன்படுத்தப்பட்டன”

#TamilSchoolmychoice

“இந்நிலையில், அவற்றில் இரண்டு ஜாடிகளை மாணவர்கள் சுற்றுலாப் பயணிகளும் வரும் கேஎல்சிசி வளாகத்திலேயே விட்டுச் சென்றதற்காக நாங்கள் வருந்துகின்றோம்” என்று அந்த அறிக்கை கூறுகின்றது.

நேற்று மாலை கேஎல்சிசி வளாகத்தில் சந்தேகத்திற்கு இடமாக இரண்டு கண்ணாடி ஜாடிகள் இருந்ததைப் பார்த்த சில ஊழியர்கள், உடனடியாக அது குறித்து காவல்துறைக்குத் தகவல் அளித்தனர்.

உடனடியாக அங்கு வெடிகுண்டு நிபுணர்களோடு வந்த காவல்துறை, அப்பொருட்களை அங்கிருந்து பாதுகாப்பாக அப்புறப்படுத்தியது.

பின்னர், முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு நேற்று இரவு தகவல் அளித்த தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர், அவை வெடிகுண்டுகள் அல்ல என்றும், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அறிவியல் சோதனைப் பொருட்கள் என்றும் விளக்கமளித்தார்.