Home Featured தமிழ் நாடு தனித்து போட்டியிடும் விஜயகாந்த் அறிவிப்பை மனதார வரவேற்கிறேன் – வைகோ!

தனித்து போட்டியிடும் விஜயகாந்த் அறிவிப்பை மனதார வரவேற்கிறேன் – வைகோ!

569
0
SHARE
Ad

vaikovijayakanthசென்னை – வரும் சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளதை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மனதார வரவேற்பதாக கூறியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டை தேமுதிக மகளிரணி பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், தமிழக சட்டமன்றத்துக்கு நடைபெறும் தேர்தலை தேமுதிக தனித்து சந்திக்கும் என்றார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பிரேமலதா விஜயகாந்த் பேசும்போது, திமுக என்றால் தில்லு முல்லு, அதிமுக என்றால் அனைத்திலும் தில்லு, முல்லு. இரண்டு கட்சிகளையும் ஆட்சிக்கு வரவிடாமல் விரட்ட வேண்டும் என்று கூறிவிட்டார்.

#TamilSchoolmychoice

அதனை வழிமொழிகிற விதத்தில்தான் விஜயகாந்த் பேச்சு இருக்கிறது. நான் இதனை முழுமையாக வரவேற்கிறேன். காரணம் என்னவென்றால் 59 சீட்டுகளுக்கும், 55 சீட்டுகளுக்கும் திமுகவோடு சேர்ந்துவிட்டார் என்று செய்தி பரவியது.

இதன் மூலம் விஜயகாந்த்தின் புகழுக்கு களங்கம் கற்பிக்கப்பட்டுள்ளதாகவும், கூட்டணி குறித்து பொய் பிரசாரம் மேற்கொள்ளப் பட்டதாகவும் வைகோ தெரிவித்தார். மேலும், அந்த செய்தி உடைந்து தற்போது தவுடு பொடியாகிவிட்டது.

பேரம் பேசவில்லை என்பதை விஜயகாந்த் தெளிவுப்படுத்தி விட்டார். அவர் எடுத்த முடிவை மதிமுக மனதார வரவேற்கிறது. அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதை நான் யூகங்களாக நான் சொல்ல விரும்பவில்லை என்றார்.