ஆனால், ஏனோ, முன்னணி நடிகர்கள் மட்டும் இவர் படத்தில் இதுவரை நடித்ததே இல்லை. நடுத்தர ஹீரோக்களையும், புதுமுகங்களை வைத்தும்தான் இவர் இதுவரை படம் எடுத்து வந்திருக்கின்றார்.
ஆனால், தற்போது அதற்கு நேர் எதிராக, முதன் முறையாக முன்னணி ஹீரோ ஒருவருடன் இணைந்து தனது அடுத்த படத்தை எடுக்கவிருக்கின்றார் மிஷ்கின். தமிழ்த் திரையுலகின் இன்றைய முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான விஷால்தான் மிஷ்கினுடன் இணையப் போகும் ஹீரோ.
இந்த புதிய படத்திற்கு “துப்பறிவாளன்” என பெயர் சூட்டப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
தற்போது, “மருது” என்ற படத்தில் நடித்துவரும் விஷால், அடுத்து மிஷ்கின் இயக்கத்தில் இந்த “துப்பறிவாளன்” படத்தில் நடிக்கின்றார்.
இருவரும் இணையும் முதல் படம் என்பதால், இந்தப் படத்திற்கான அறிவிப்பு வெளியான முதல் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு இரசிகர்களிடையே அதிகரித்து வருகின்றது.
படத்தின் பெயரைப் பார்க்கும்போதே ஒரு போலீஸ் அதிகாரி துப்பறியும் கதை – அல்லது உளவாளி ஒருவனின் கதை – என்பது போன்ற திரில்லர் படமாக இருக்கப் போகின்றது என தமிழ் சினிமா வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.