Home Featured கலையுலகம் விஜய் நடிக்கும் ‘தெறி’ ஏப்ரல் 14இல் புத்தாண்டு வெளியீடு – மார்ச் 20இல் இசை வெளியீடு!

விஜய் நடிக்கும் ‘தெறி’ ஏப்ரல் 14இல் புத்தாண்டு வெளியீடு – மார்ச் 20இல் இசை வெளியீடு!

784
0
SHARE
Ad

Theri-movie-posterசென்னை – நடிகர் விஜய் நடிப்பில், தமிழ் சினிமா இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் “தெறி” படம் எதிர்வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு வெளியீடாக திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்திற்கான இசை-பாடல் வெளியீடு எதிர்வரும் மார்ச் 20ஆம் தேதி பிரம்மாண்டமான முறையில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் “தெறி” படத்தில் அவருடன் எமி ஜாக்சன், சமந்தா ஆகிய இருவரும் கதாநாயகிகளாக இணைகின்றனர். ராதிகா, பிரபு ஆகியோருடன் நடிக்கின்றனர்.

#TamilSchoolmychoice

படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் முன்னாள் நடிகை மீனாவின் மகள் நடிக்கின்றார். இவர் விஜய்யின் மகள் கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

படத்தின் மற்றொரு கவரும் அம்சம், “உதிரிப் பூக்கள்”, “முள்ளும் மலரும்” போன்ற பிரபல படங்களை இயக்கிய மகேந்திரன், இந்தப் படத்தில் வில்லனாக நடிப்பதுதான்.

இப்படிப் பல அம்சங்களில் இரசிகர்களின் எதிர்பார்ப்புகளை எகிற வைத்திருக்கும் “தெறி” படத்தின் விற்பனையும் சூடுபிடித்துள்ளதாகவும், இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவிலான விலையில் படம் விற்கப்பட்டதாகவும், கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.