Home Featured கலையுலகம் தப்பிச்சென்ற விஜய் மல்லைய்யாவுடன் செல்ஃபி எடுத்து சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகர்!

தப்பிச்சென்ற விஜய் மல்லைய்யாவுடன் செல்ஃபி எடுத்து சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகர்!

519
0
SHARE
Ad

vijay mallaiyaஐதராபாத் – நாட்டை விட்டு தப்பித்து சென்ற விஜய் மல்லைய்யாவுடன் செல்ஃபி எடுத்து, சர்ச்சையில் சிக்கிக்கொண்டிருக்கிறார் டோலிவுட் நடிகர் அல்லரி நரேஷ். 17 வங்கிகளிடம் வாங்கிய 9௦௦௦ கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்த முடியாமல் நாட்டை விட்டு தப்பியோடியவர் விஜய் மல்லைய்யா.

இவர் இந்தியாவை விட்டு தப்பி சென்று லண்டனில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதங்களும் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தப்பிச்சென்ற விஜய் மல்லைய்யாவுடன் செல்ஃபி எடுத்து சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கிறார் டோலிவுட் நடிகர் அல்லரி நரேஷ். இந்த செல்பியை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அல்லரி நரேஷ்.

#TamilSchoolmychoice

பல வங்கிகளால் தேடப்பட்டு வரும் விஜய் மல்லைய்யாவுடன் நான் எடுத்துக் கொண்ட செல்ஃபி. அநேகமாக இதுதான் இந்தியாவில் அவர் எடுத்துக் கொண்ட கடைசி செல்ஃபி என நினைக்கிறேன். ரசித்து மகிழுங்கள்” என்று கூறியிருக்கிறார்.

அல்லரி நரேஷ் பதிவிட்ட இப்புகைப்படம் தற்போது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அல்லரி நரேஷ் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தின் பெயர் செல்ஃபி எனவும், அதனால் தான் இப்படி அவர் விளம்பரம் தேடுவதாகவும் டோலிவுட்டில் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது. தமிழில் குறும்பு மற்றும் போராளி ஆகிய படங்களில் அல்லரி நரேஷ் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.