Home Featured நாடு “பெட்ரோனாசிலிருந்து எப்போதோ நான் விலகி விட்டேன்” – மகாதீர் விளக்கம்!

“பெட்ரோனாசிலிருந்து எப்போதோ நான் விலகி விட்டேன்” – மகாதீர் விளக்கம்!

668
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பெட்ரோனாஸ் ஆலோசகர் பதவியிலிருந்து துன் மகாதீர் நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் எடுத்துள்ள முடிவு குறித்து கருத்துரைத்துள்ள மகாதீர், தான் எப்போதோ அந்தப் பதவியிலிருந்து விலகி விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

Tun Mahathir“என்னை பெட்ரோனாஸ் ஆலோசகர் பதவியிலிருந்து நீக்கி விட்டதாக அறிவித்துள்ளனர். இந்த முடிவை அமைச்சரவை செய்துள்ளது. இதிலிருந்து அரசாங்கத்திற்கு மிகவும் முக்கியமான முடிவுகளில் ஒன்றாக இது தெரிகின்றது. ஆனால், அந்தப் பதவியிலிருந்து நான் எப்போதோ விலகி விட்டேன். ஆனால் பெட்ரோனாஸ் நிர்வாகம் எனது பதவி விலகலை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது. அவர்கள் கொடுத்த படித்தொகையையும் (அலவன்ஸ்) நான் திருப்பி அனுப்பி விட்டேன். ஆனால், அதையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளாமல், நேரடியாக எனது வங்கிக் கணக்கில் வலுக்கட்டாயமாக செலுத்தி வந்துள்ளனர்” என மகாதீர் தனது வலைத்தளத்தில் வெளியிட்டு கட்டுரையில் விளக்கியுள்ளார்.

“நான் ஏன் விலகினேன் என்றால், ஆலோசனை எதுவும் கூறாத ஆலோசகராகச் செயல்படுவதற்கும், எதுவும் செய்யாததற்கு எனக்கு பணம் அளிக்கப்படுவதையும் நான் விரும்பவில்லை” எனவும் மகாதீர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

mahathirproton“ஆனால், இப்போது நஜிப் ஆதரவாளர்கள் நான் புரோட்டோன் தலைவர் பதவியிலிருந்தும், பெர்டானா லீடர்ஷிப் பவுண்டேஷன் என்ற அமைப்பிலிருந்தும் நீக்கப்பட வேண்டுமென கூறியுள்ளனர். இவை இரண்டும் அரசாங்கத்துக்குச் சொந்தமான நிறுவனங்கள் இல்லை. ஆனால், பயங்கரவாத நடவடிக்கைக்காக யாரையும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டும் வல்லமை படைத்த அரசாங்கம் நினைத்தால், இந்த இரண்டு நிறுவனங்கள் ஒரு பெரிய தடையே இல்லை. இடையூறு ஏற்படுத்தக்கூடிய, மோசமான எதுவும் செய்யப்படலாம். உதாரணமாக, புரோட்டோன் நிறுவனத்தைத் திவால் ஆக்குவது, பெர்டானா லீடர்ஷிப் பவுண்டேஷன் உருவாவதற்குத் துணை நின்றவர்களுக்கு தொந்தரவு கொடுப்பது, அதன்மூலம் என்னை அங்கிருந்து வெளியே தூக்கி எறிவது, போன்ற காரியங்கள் மேற்கொள்ளப்படலாம். இவையெல்லாம் ஜனநாயகம்தான்!” என்றும் கிண்டலும், வேதனையும் நிறைந்த வார்த்தைகளை தனது கட்டுரையில் வெளிப்படுத்தியுள்ளார் மகாதீர்.