Home Featured நாடு ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை இல்லை!

ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை இல்லை!

611
0
SHARE
Ad

கூச்சிங் – பிரதமர் நஜிப்பின் கூச்சிங் வருகையின்போது அவரை அனுமதியின்றி அணுகி பேட்டி எடுக்க முயன்றதால் காவல் துறையினரால் தடுத்து வைக்கப்பட்ட இரண்டு ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளர்கள் மீது எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என எதிர்பார்க்கப்படுகின்றது.

Malaysian Policeஅவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதனால் எழக் கூடிய அனைத்துல நெருக்குதல், குறிப்பாக ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் கண்டனம், உள்நாட்டிலும், பத்திரிக்கையாளர்கள் மத்தியில் எழுந்த அதிருப்தி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகின்றது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளர்களின் வழக்கறிஞரை திங்கட்கிழமை இரவு அழைத்த காவல் துறையினர் நீதிமன்றத்திற்கு நீங்கள் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது எனத் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

அவர்கள் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட வேண்டும், சில ஆவணங்கள் கையெழுத்திடப்பட்டதும் அவர்கள் விடுதலை செய்யப்படுவர், அதன் பிறகு அவர்கள் சில மணி நேரங்களில் நாட்டைவிட்டு வெளியேறலாம்  எனக் காவல் துறையினர் அவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பத்திரிக்கையாளர்கள் இருவரும் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவர் என சரவாக் மாநிலத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைவர், துணை ஆணையர் (சீனியர் அசிஸ்டெண்ட் கமிஷனர்) தேவ்குமார் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.