Home Featured இந்தியா இங்கிலாந்து குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்திக்கு நாடாளுமன்றக்குழு மனு!

இங்கிலாந்து குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்திக்கு நாடாளுமன்றக்குழு மனு!

594
0
SHARE
Ad

Rahul-Gandhi-PTI4-Lபுதுடெல்லி – இங்கிலாந்து குடியுரிமை விவகாரம் தொடர்பாக பதிலளிக்குமாறு ராகுல் காந்திக்கு நாடாளுமன்ற நெறிமுறைக்குழு மனு அனுப்பியுள்ளது. இங்கிலாந்தின் பேகோப்ஸ் நிறுவனத்தின் இயக்குனராக இருந்த ராகுல் காந்திக்கு, அந்த நிறுவனத்தில் 65 சதவீத பங்குகள் இருந்ததாக தெரிகிறது.

இதற்காக அவர் அங்கே தங்கியிருந்த போது, தன்னை ஒரு இங்கிலாந்து குடிமகன் என கூறியதாக கடந்த சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியானது. இதுகுறித்து பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி புகார் எழுப்பினார்.

இங்கிலாந்து குடியுரிமை வைத்திருக்கும் ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு அவர் கோரிக்கை விடுத்தார். மேலும் நாடாளுமன்ற சபாநாயகருக்கும் கடிதம் எழுதியிருந்தார்.

#TamilSchoolmychoice

இந்த விவகாரம் தொடர்பாக கிழக்கு டெல்லி எம்.பி. மகேஷ் கிரி, சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் புகார் அளித்தார். இதை பரிசீலித்த அவர், கடந்த ஜனவரி மாதம் இந்த புகாரை நாடாளுமன்ற நெறிமுறைக்குழுவுக்கு அனுப்பி வைத்தார்.

பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே.அத்வானி தலைமையிலான இந்த குழு, ராகுல் காந்திக்கு தற்போது நோட்டீசு அனுப்பியுள்ளது.

இதுகுறித்து நெறிமுறைக்குழு உறுப்பினர்களில் ஒருவரான அர்ஜுன் ராம் மெக்வால் கூறுகையில், ‘லண்டனில் இருந்த போது இங்கிலாந்து குடிமகன் என அறிவித்ததற்கு விளக்கம் அளிக்குமாறு ராகுல் காந்திக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது’ என்று கூறினார். நாடாளுமன்றக்குழுவின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை இது என அக்கட்சி கூறியுள்ளது. நாடு எதிர்கொண்டு வரும் பல்வேறு நெருக்கடியில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே இந்த நடவடிக்கையை அரசு மேற்கொண்டிருப்பதாக, காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ரேணுகா சவுத்ரி கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். இதுகுறித்து நாடாளுமன்றத்துக்கு வெளியே நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி அதில் தனக்கு எதிராக தவறு எதுவும் கண்டுபிடிக்கப்பட்டால் அரசு தன்னை சிறைக்கு அனுப்பட்டும் என்றும் கூறினார்.