Home Featured உலகம் அமெரிக்கர்கள் டொனால்டு டிரம்பை அதிபராக தேர்வு செய்ய மாட்டார்கள் – ஒபாமா!

அமெரிக்கர்கள் டொனால்டு டிரம்பை அதிபராக தேர்வு செய்ய மாட்டார்கள் – ஒபாமா!

606
0
SHARE
Ad

donald trump(N)வாஷிங்டன் – விரைவில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது குடியரசுக்கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக வலம் வரும் டொனால்டு டிரம்பை அமெரிக்க மக்கள் வெற்றி பெற செய்ய மாட்டார்கள் என அதிபர் ஒபாமா நம்பிக்கையுடன் உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதுபற்றி வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் ஜோஷ் எர்னஸ்ட் தெரிவித்தவை:- அமெரிக்காவில் அரசியல்வாதிகள் எழுப்பி வரும் விவாதங்களை உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.

ஒபாமா பொதுமக்களுக்கு ஆற்றிய உரையில் இதுவரை இரண்டு முறை தெளிவாக கூறியிருக்கிறார். டிரம்ப் அதிபராக தேர்வு செய்யப்படுவார் என அவருக்கு நம்பிக்கை கிடையாது. என்னை பொறுத்தவரை அமெரிக்க மக்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும்.

#TamilSchoolmychoice

ஒழுக்கம், அறிவு, திறமை, பொதுமக்களின் கருத்துக்களை புரிந்துகொள்ள விருப்பம் உள்ள ஒருவரையே அதிபராக மக்கள் தேர்வு செய்ய வேண்டும்.  டிரம்பின் பேச்சையும், செயலையும் உற்று கவனித்து பார்த்தால் அவர் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவார் என்ற வாய்ப்பிற்கே இடமில்லை என அவர் தெரிவித்தார்.