Home Featured நாடு “நான் நினைத்திருந்தால் கெடா சட்டமன்றத்தைக் கலைத்திருக்கலாம்” – முக்ரிஸ் கூறுகின்றார்!

“நான் நினைத்திருந்தால் கெடா சட்டமன்றத்தைக் கலைத்திருக்கலாம்” – முக்ரிஸ் கூறுகின்றார்!

635
0
SHARE
Ad

mukriz mahathir mb kedahகோலாலம்பூர் – கெடா மந்திரி பெசாராகப் பதவி வகித்த கடைசி நிமிடங்களை நினைவு கூறும் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர், கெடா சட்டமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் அப்போது தன்னிடம் இருந்தது என்றும், தான் நினைத்திருந்தால் சட்டமன்றத்தைக் கலைத்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

கெடா அரசியலமைப்பின் படி, எந்த சூழ்நிலையிலும் மந்திரி பெசாருக்கு சட்டமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் உண்டு.

“அப்போது அந்த அதிகாரம் என் கையில் இருந்தது. அந்த கடைசி நிமிடங்களில், சட்டமன்றத்தில் எனக்குப் போதுமான ஆதரவில்லை, இனி என்னால் நீடிக்க முடியாது என்ற சூழலிலும், சட்டமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் இருந்தது.”

#TamilSchoolmychoice

“நான் அப்படி செய்திருந்தால் என்ன ஆயிருக்கும் என்று நினைக்கிறீர்கள்? 60 நாட்களுக்குப் பிறகு தேர்தல் நடைபெற்றிருக்கும், அதன் முடிவுகள் என்னவாயிருக்கும் என்று எல்லோருக்கும் தெரியும்”

“கண்டிப்பாக அரசாங்கம் பாரிசானிடமிருந்து எதிர்கட்சிகளிடம் போயிருக்கும்” என்று பூச்சோங்கில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் முக்ரிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தான் அவ்வாறு முடிவெடுக்காததற்குக் காரணம் அம்னோவையும், பாரிசானையும் நேசிப்பது தான் என்றும், கட்சிக்கு துரோகம் செய்ய மனம் வரவில்லை என்றும் முக்ரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

தன்னை வெளியேற்ற சொந்த கட்சியைச் சேர்ந்த தலைவர்களே பல சதி வேலைகள் செய்தும் கூட, தான் கட்சிக்குப் பாதகமாக நடந்து கொள்ளவில்லை என்றும் முக்ரிஸ் தெரிவித்துள்ளார்.