Home Featured நாடு இரண்டாக உடைகிறது பெர்காசா: நஜிப் ஆதரவு அணி, மகாதீர் ஆதரவு அணி எனப் பிளவு!

இரண்டாக உடைகிறது பெர்காசா: நஜிப் ஆதரவு அணி, மகாதீர் ஆதரவு அணி எனப் பிளவு!

672
0
SHARE
Ad

ibrahim-aliகோலாலம்பூர் – மலாய் உரிமைக்காகப் போராடும் அமைப்பான பெர்காசா இரண்டாக உடைந்து, நஜிப் ஆதரவு அணியாகவும், மகாதீர் ஆதரவு அணியாகவும் பிளவுபட்டுள்ளது.

இதை ஒப்புக் கொள்ளும் பெர்காசா பொதுச்செயலாளர் சையத் ஹசான் சையத் அலி, கடந்த மார்ச் 4-ம் தேதி, மகாதீர் மக்கள் பிரகடனத்தை அறிவித்த போது, பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி (படம்) அங்கு இருந்தது தான் இந்தப் பிளவுக்குக் காரணம் என்று தெரிவித்துள்ளார்.

“இப்போது பெர்காசாவில் இருக்கும் அம்னோ உறுப்பினர்கள் குழுக்களாக பிரிந்து உள்ளனர். தலைவர் மற்றும் தலைமைத்துவத்தின் மீதான எதிர்ப்பைக் காட்ட பெர்காசா அம்னோ உறுப்பினர்கள் தங்களது உறுப்பினர் பதவிலிருந்து விலகிக் கொள்கிறார்கள்”

#TamilSchoolmychoice

“பெர்காசா தனது உண்மையான போராட்டத்தில் இருந்து விலகிச் செல்வதாக அவர்கள் கூறுகின்றார்கள்” என்று சையத் ஹசான் தெரிவித்துள்ளார்.