வாஷிங்டன் – அமெரிக்க நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற அமெரிக்க அதிபருக்கான வேட்பாளர் நியமனத் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியில் குதித்திருக்கும் ஹிலாரி கிளிண்டன் ஓஹையோ, நோர்த் கேரோலினா, புளோரிடா ஆகிய மூன்று பெரிய மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக அவர் தேர்வு பெறுவது உறுதியாகியுள்ளது.
குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் புளோரிடா மாநிலத்தில் வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து அவரும் அந்தக் கட்சியின் சார்பாக தேர்வு பெறும் வாய்ப்பை நெருங்கி வருகின்றார். இல்லினோய்ஸ், நோர்த் கெரோலைனா மாநிலங்களிலும் அவர் வெற்றி வாகை சூடுவார் என சிஎன்என் தொலைக்காட்சி கணித்துள்ளது.
இதற்கிடையில் மற்றொரு குடியரசுக் கட்சி வேட்பாளரான மார்க்கோ ரூபியோ அதிபர் வேட்பாளர் போட்டியிலிருந்து விலகிக் கொண்டுள்ளார்.