Home Featured கலையுலகம் விஜய் சேதுபதியின் ‘காதலும் கடந்து போகும்’ வசூல் சாதனை!

விஜய் சேதுபதியின் ‘காதலும் கடந்து போகும்’ வசூல் சாதனை!

747
0
SHARE
Ad

kaadalum kadanthu pogumசென்னை – விஜய் சேதுபதி, மடோனா நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கிய ‘காதலும் கடந்து போகும்’ (காகபோ) படம் அதிக எதிர்பார்ப்புக்கிடையில் கடந்த வெள்ளியன்று வெளியானது.

நானும் ரெளடிதான், சேதுபதி என இரண்டு வெற்றிப் படங்களுக்குப் பிறகு, வெளிவந்த விஜய் சேதுபதியின் படம் என்பதால் மூன்றாவது வெற்றியை அவர் தொடுவாரா என்கிற ஆவல் உருவாகியிருந்தது.

327 திரையரங்குகளில் வெளியான ‘காதலும் கடந்து போகும்’ படத்துக்கு தமிழக அரசு வரிவிலக்கு அளித்திருந்தது. காதல் படம் என்பதாலும் முதல்நாளே பலத்த வரவேற்பு கிடைத்தது. அன்றைய தினம் மட்டும் ரூ. 2.55 கோடி வசூல் கிடைத்தது.

#TamilSchoolmychoice

முதல் நாள் முதலே படத்துக்குச் சாதகமான விமரிசனங்கள் வெளிவந்ததால் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகி, வசூலிலும் சாதனை செய்து வருகிறது. வார இறுதி வசூல் என்கிற வெள்ளி, சனி, ஞாயிறு என இந்த முதல் மூன்று நாள்களில் ரூ. 7.50 கோடி வசூல் கிடைத்துள்ளது.

அமெரிக்காவில் முதல் மூன்று நாள்களில் ரூ. 60 லட்சத்தை ஈட்டியுள்ளது. இதனால் விஜய் சேதுபதி படங்களில் அதிகம் வசூலான படம் என்கிற பெருமையை ‘காதலும் கடந்து போகும்’ தட்டிச் சென்றுள்ளது.