Home Featured தமிழ் நாடு கூட்டணி பேச்சுவார்த்தையில் ஓ.பன்னீர் செல்வம் அணிக்குத் தடை – ஜெயலலிதா அதிரடி!

கூட்டணி பேச்சுவார்த்தையில் ஓ.பன்னீர் செல்வம் அணிக்குத் தடை – ஜெயலலிதா அதிரடி!

539
0
SHARE
Ad

opsசென்னை – கூட்டணி பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு ஜெயலலிதா தடை விதித்துள்ளார். நேற்றைய கூட்டத்தில் அவர்கள் பங்கேற்க அனுமதிக்கவில்லை. இதனால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுகவில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அடுத்தப்படியாக அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன் ஆகியோர் அடங்கிய ஐவர் அணி இருந்து வந்தது.

கட்சி செயல்பாடு, ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது மற்றும் கட்சி நிகழ்ச்சிகள், விழாக்களை முன்னின்று நடத்துவது போன்ற பணியில் இவர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்த ஐவர் அணியினர் சட்டமன்ற உறுப்பினர் சீட் வாங்கி தருவதாகக் கூறி, கோடிக்கணக்கில் சம்பாதித்ததாகவும், அதன் மூலம் கோடிக்கணக்கில் சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாகவும் முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

#TamilSchoolmychoice

இதையடுத்து 5 பேரையும் நேரடியாக அழைத்து முதல்வர் எச்சரிக்கை செய்து அனுப்பினார்; பல கட்டுப்பாடுகளையும் விதித்தார். இதனால்,  கடந்த 2 மாதமாக கட்சியிலும் ஆட்சியிலும் ஐவர் அணியினர் ஓரம்கட்டப்பட்டு வந்தனர்.

கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டது. வேட்பாளர் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதை, அடுத்து வேட்பாளர் தேர்வில் முதல்வர் ஜெயலலிதாவே நேரடியாக களத்தில் இறங்கினார்.

வேட்பாளர்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை போயஸ்கார்டனுக்கு அழைத்து முதல்வர் ஜெயலலிதாவே நேர்காணலை நடத்தினார். இதில் ஐவர் அணியினர் புறக்கணிக்கப்பட்டனர்.

அவர்களுக்கு பதிலாக அவைத்தலைவர் மதுசூதனன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் தமிழ் மகன் உசேன், சிறுபான்மையினர் பிரிவு செல்வராஜ் ஆகிய 3 பேர் மட்டுமே நேர்காணலின் போது உடன் இருந்தனர்.

மேலும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை அமைத்து அன்றைய தினம் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். இதில் ஐவர் அணியினர் உள்ளிட்ட 14 பேர் பங்கேற்றனர். ஆனால், முதல்வர் அவர்களை சந்திக்காமல் செல்பேசியில் தொடர்பு கொண்டு திருப்பி அனுப்பினார்.

இதனால், அந்த குழுவினர் ஏமாற்றம் அடைந்தனர். இந்த  நிலையில், வர உள்ள சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க பெரிய  கட்சிகள் தயக்கம் காட்டி வருகின்றன.

இதனால் தங்கள் அணியில் இடம் பெற்றுள்ள  சிறிய கட்சிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா அழைப்பு விடுத்தார். இதில் ஓ.பன்னீர் செல்வம் அணியினர் பங்கேற்க அனுமதிக்கவில்லை. அதனால் அவர்கள் போயஸ் கார்டனுக்கு  வரவில்லை.

அதன்படி முதல்வர் ஜெயலலிதாவை போயஸ்கார்டன் இல்லத்தில் நேற்று பிற்பகல் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம். பாக்கர், இந்திய குடியரசு கட்சி மாநிலத் தலைவர் செ.கு. தமிழரசன், தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி தலைவர் ஷேக் தாவூத், சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர்  எர்ணாவூர் நாராயணன் ஆகிய 7 கட்சியின் நிர்வாகிகள் தனித்தனியே சந்தித்து பேசினர்.

அப்போது அவர்கள் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர்.  முதல்வரை சந்தித்து விட்டு வெளியே வந்த  கட்சியினர் கூறுகையில்,” முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து சட்டப்பேரவை  தேர்தலில் அதிமுகவுக்கு முழு ஆதரவு தெரிவித்தோம்.

மேலும், கூட்டணி தொடர்பாக  பேசினோம். தொகுதி பங்கீடு குறித்து பேசவில்லை. அதிமுக தொகுதி பங்கீடு குழு  அமைத்தவுடன் அவர்களிடம் தொகுதி பங்கீடு குறித்து பேசுவோம் என்றனர். அதிமுகவில் ஓபிஎஸ் தலைமையில் ஏற்கனவே நால்வர் அணி தான் இருந்து வந்தது.

கடந்த ஆண்டு அமைச்சர் பழனியப்பன் கூடுதலாக அந்த பட்டியலில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து நால்வர் அணி ஐவர் அணியாக மாறியது. தற்போது வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி நீங்கலாக, ஓபிஎஸ், நத்தம், பழனியப்பன் என மூவர் அணியாக மாறியது குறிப்பிடத்தக்கது.