நேற்று கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இது குறித்து பேசுகையில், “நாம் உயர்நிலைப் பள்ளிகளை தேசியப் பள்ளிகளாகக் கருதுகின்றோம், ஆனால் சில நேரங்களில் அப்பள்ளிகளில் மலாய் மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். ஆகவே அப்பள்ளிகளை மலாய் உயர்நிலைப் பள்ளி என்றே அழைக்க முடியும்” என்று அப்துல் அசிஸ் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இந்தச் சூழ்நிலையில் நாட்டில் மக்களிடையே ஒற்றுமை நிலவ பெரும் தடையாக உள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
தன்னுடைய பள்ளி நாட்களை நினைவு கூறும் அவர், தான் படித்த தேசியப் பள்ளியில் மலாய், இந்தியர்கள் மற்றும் சீனர்கள் என பல்லின மாணவர்களும் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாகத் தான், கல்வியாளர்கள், மாணவர் தலைவர்களோடு, நாட்டில் பல்லினங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மத்தியில் தேசப்பற்று மற்றும் சகிப்புத்தன்மையின் நிலை குறித்து அறிய தாங்கள் இந்தக் கலந்துரையாடலை நடத்துவதாகவும் அப்துல் அசிஸ் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
தகவல்: மலேசியாகினி