Home Featured இந்தியா விஜய் மல்லைய்யாவின் கிங்பிஷர் வீடு இன்று ஏலம் விடப்படுகிறது!

விஜய் மல்லைய்யாவின் கிங்பிஷர் வீடு இன்று ஏலம் விடப்படுகிறது!

598
0
SHARE
Ad

vijay-mallyaமும்பை – கடனை திருப்பி செலுத்தாத தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் மும்பை கிங்பிஷர் வீட்டை எஸ்.பி.ஐ. இன்று ஏலம் விடுகிறது. வீட்டின் ஆரம்ப மதிப்பு ரூ. 150 கோடி ஆகும்.

பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை திரும்ப செலுத்தாமல் மோசடி செய்ததாக பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா மீது மோசடி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக வங்கிகள் கூட்டமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும் அவர் மீது சி.பி.ஐ., அமலாக்க துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#TamilSchoolmychoice

இதனிடையே கடந்த 2–ஆம் தேதி இங்கிலாந்துக்கு விஜய் மல்லையா சென்று விட்டார். ‘இந்தியாவுக்கு நான் இப்போது திரும்ப வாய்ப்பு இல்லை’ என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் கடனை திருப்பி செலுத்தாத தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் மும்பை கிங்பிஷர் வீட்டை எஸ்.பி.ஐ. இன்று ஏலம் விடுகிறது.

தற்போது தரையில் நிற்கும் கிங்பிஷர் நிறுவனத்திற்கு கடனாக கொடுத்த ரூ. 6,963 கோடியை மீட்கும் நடவடிக்கையாக மும்பை ஜோகேஷ்வரியில் உள்ள அவருடைய கிங்பிஷர் வீட்டை எஸ்.பி.ஐ. ஏலம் விட உள்ளது.

இணையத்தளத்தில் வீடு ஏலத்திற்கு விடப்படுகிறது. வீட்டின் ஆரம்ப மதிப்பு ரூ. 150 கோடியாகும். வீடானது கிங்பிஷர் நிறுவனத்தின் தலைமையகமாகவும் செயல்பட்டது.

ஏலம் ரூ.5 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. ஏலத்தில் கலந்துக் கொள்பவர்கள் ரூ. 15 லட்சம் கணக்கில் முன்பதிவு செய்திருக்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் வெற்றிபெற்ற எஸ்.பி.ஐ. கடந்த பிப்ரவரி மாதம் விமான நிலையம் அருகே உள்ள கிங்பிஷர் வீட்டை தன்வசம் கொண்டுவந்தது. இதேபோன்று கோவாவில் உள்ள ரூ.90 கோடி மதிப்பிலான கிங்பிஷர் வில்லாவையும் எடுத்தனர்.