Home Featured இந்தியா நேபாளத்தில் சுஷ்மா சுவராஜ் பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் சந்திப்பு!

நேபாளத்தில் சுஷ்மா சுவராஜ் பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் சந்திப்பு!

636
0
SHARE
Ad

swarajsushma-kQmC--621x414@LiveMintநேப்பாள்  – வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகர்  சர்தாஜ் அஜீஸ் இடையிலான பேச்சுவார்த்தை நேப்பாளத்தில் இன்று நடைபெறுகிறது.

சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளில் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு நேப்பாள  நாட்டில் உள்ள பெகாரா  நகரில் இன்று நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் பாகிஸ்தான் பிரதமரின் வெளியுறவுத்துறை ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் ஆகியோர் பெகாரா சென்றுள்ளனர்.

#TamilSchoolmychoice

மாநாட்டில் பங்கேற்க வந்துள்ளவர்களுக்கு நேப்பாள அரசு சார்பில் நேற்று விருந்து அளிக்கப்பட்டது. இதில் சுஷ்மா சுவராஜ் மற்றும் சர்தாஜ் அஜீஸ் சந்தித்துக் கொண்டனர்.

இன்று மாலை இருவரும் மீண்டும் சந்தித்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றனர்.

முன்னதாக பொகாராவில் சர்தாஜ் அஜீஸ் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: பதான்கோட் தாக்குதல் சம்பவம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் சுஷ்மா ஸ்வராஜுடன் பேச்சு நடத்துவதற்கு தயாராக உள்ளேன்.

பதான்கோட் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் அமைத்துள்ள சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. அந்தக் குழு தனது விசாரணைக்காக விரைவில் இந்தியா செல்லும்.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் நடைபெறவுள்ள சார்க் உச்சி மாநாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கும் கடிதத்தை அளிப்பதுதான், சுஷ்மாவுடனான சந்திப்பின் முக்கிய நோக்கமாகும்.

அப்போது அவர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று விரும்பினால், நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றார் சர்தாஜ் அஜீஸ்.  நேப்பாளம் சென்றுள்ள வெளியுறவுத் துறை செயலர் ஜெய்சங்கரும், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலர் எய்ஜாஸ் அகமது சௌதரியும் 3 முறை சந்தித்துள்ளனர். ஆனால், அவர்கள் இருவரும் அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.