Home Featured கலையுலகம் தி.மு.க.வில் இணைந்தார் நடிகர் கார்த்திக்!

தி.மு.க.வில் இணைந்தார் நடிகர் கார்த்திக்!

660
0
SHARE
Ad

karthik56-600சென்னை – சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க. வியூகம் அமைத்து செயல்பட்டு வருகிறது. தி.மு.க. கூட்டணியில் தற்போது காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளது.

பல்வேறு அமைப்புகள் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் தி.மு.க. கூட்டணியில் நடிகர் கார்த்திக் தலைமையிலான நாடாளும் மக்கள் கட்சியும் இணைய உள்ளது. நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் கார்த்திக் இன்று காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்திற்கு வருகிறார்.

அங்கு அவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை அவர் சந்தித்து பேசி, தி.மு.க. கூட்டணியில் இணைகிறார். அம்பாசமுத்திரம், தென்காசி, ஆலங்குளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் ஒரு தொகுதியில் நடிகர் கார்த்திக் போட்டியிட இருப்பதாக அக்கட்சி வட்டாரம் தெரிவித்தது.