Home Featured கலையுலகம் சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை – உதயநிதி ஸ்டாலின் மறுப்பு!

சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை – உதயநிதி ஸ்டாலின் மறுப்பு!

876
0
SHARE
Ad

udaiசென்னை – தமிழகத்தில் நடைபெற உள்ள சட்ட சபைத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், திமுக தலைவர் கருணாநிதி திருவாரூர் தொகுதியிலும், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும் போட்டியிட உள்ளனர்.

இந்நிலையில், ஆயிரம் விளக்கு தொகுதியில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின், இந்தத் தொகுதியில் நிற்கப் போவதகா திமுக தரப்பில் செய்திகள் வெளியாகியுள்ளது.

#TamilSchoolmychoice

ஆனால் இது குறித்து உதயநிதி ஸ்டாலின் மறுப்புத் தெரிவித்துள்ளார்.”எனக்கும் அரசியலுக்கும் முதலில் சம்பந்தமில்லை. நான் பேசாமல் படங்கள் தயாரிப்பு, விநியோகம், நடிப்பு என போய்க் கொண்டிருக்கிறேன். தேர்தலில் நிற்கும் எண்ணம் இந்த தேர்தல் மட்டுமல்ல எந்த தேர்தலிலும் இல்லை என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.