Home Featured இந்தியா தீவிரவாதத்துக்கு எதிரான போர் எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல – மோடி

தீவிரவாதத்துக்கு எதிரான போர் எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல – மோடி

638
0
SHARE
Ad

modiபுதுடெல்லி – தீவிரவாதத்துக்கு எதிரான போர், எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல என்று இஸ்லாமிய மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். அகில இந்திய உலமாக்கள் வாரியம் சார்பில் டெல்லியில், உலக சூபி மாநாடு நேற்று தொடங்கியது.

4 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில், உலக தீவிரவாதத்தை ஒடுக்குவதில் சூபியிசத்தின் (இஸ்லாமிய மறை மெய்ஞான கோட்பாடு) பங்கு குறித்து விவாதிக்கப்படுகிறது.

இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசும்போது, ”தீவிரவாத சக்திகளை எதிர்த்து போரிடுவதில் உலக நாடுகள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
தீவிரவாதம் என்பது ராணுவம், உளவுத்துறை மற்றும் தூதரக நடவடிக்கைகள் மூலம் மட்டுமே ஒடுக்கக்கூடியது அல்ல.

#TamilSchoolmychoice

அதை நமது நேர்மையின் பலத்தின் மூலம் வெற்றிகொள்ள வேண்டும். தீவிரவாதத்துக்கு எதிரான போர், எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல. அப்படி இருக்கவும் முடியாது.

அது, மனிதத்தன்மைக்கும், மனிதாபிமானமற்ற தன்மைக்கும் இடையிலான போராட்டம். மதத்துக்கும், தீவிரவாதத்துக்கும் இடையே முடிச்சு போடக்கூடாது. அப்படி செய்பவர்கள், மத விரோதிகள்.

தீவிரவாதிகள், தாங்கள் எந்த மதத்துக்காக போராடுகிறோம் என்று சொல்கிறார்களோ, அந்த மதத்தையே சீர்குலைக்கிறார்கள். மற்ற பகுதிகளைவிட, தங்கள் சொந்த மண்ணையும், சொந்த மக்களையும் அதிகமாக அழிக்கிறார்கள், கொன்று குவிக்கிறார்கள்.

மொத்த பிராந்தியத்தையும் அழிவுக்கு உள்ளாக்குகிறார்கள். உலகம் முழுவதையும் பாதுகாப்பற்றதாகவும், வன்முறையானதாகவும் மாற்றுகிறார்கள். தீவிரவாதம், பல நாடுகளை அப்பாவி மக்களின் சுடுகாடாக மாற்றி விட்டது.

பிள்ளைகளின் சவப்பெட்டிக்கு பெற்றோரே ஆணி அடிக்கிறார்கள். லட்சக்கணக்கானோர் இடம் பெயர்கிறார்கள். ஏராளமானோர், தங்கள் குடும்பத்தினரை இழந்து தவிக்கிறார்கள். தீவிரவாதம் பல வழிகளில் ஈர்க்க முயற்சிக்கிறது.

ஆனால், அதற்கான காரணங்கள், எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாதவை. இந்த நிலையில், அடிப்படைவாதத்துக்கு இஸ்லாமிய மறை மெய்ஞான கோட்பாடு உரிய தீர்வாக அமையும்” என்றார்.