Home Featured நாடு பங்களா வாங்கிய விவகாரம்: குவான் எங் மீது காவல்துறையில் ஊழல் புகார்!

பங்களா வாங்கிய விவகாரம்: குவான் எங் மீது காவல்துறையில் ஊழல் புகார்!

1000
0
SHARE
Ad

Bagan MP Lim Guan Engகோலாலம்பூர் – பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்கிற்கு எதிராக டாங் வாங்கி மாவட்ட காவல்துறைத் தலைமையகத்தின் இன்று புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

அதில், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி லிம் குவான் எங், பங்களா ஒன்றை மிகக் குறைந்த விலைக்கு வாங்கி ஊழல் செய்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

நேற்று நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து பேசிய தாசிக் கெலுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாபுடின் யாஹாயா, லிம் குவான் எங் ஊழல் செய்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அதனையடுத்து, மலேசிய நட்பு ஊடக கண்காணிப்பு குழுவின் தலைவர் சபாருடின் அப்துல் ரஹிம் இன்று லிம் குவான் எங் மீது புகார் அளித்துள்ளார்.

“நேற்று ஷாபுடின் யாஹாயா கூறியதன் படி, லிம் குவான் எங் ஊழலில் ஈடுப்பட்டாரா என்பதை காவல்துறை விசாரணை செய்ய வேண்டும் என்பதற்காக புகார் அளித்துள்ளேன்”

“ஜார்ஜ் டவுனில் இருக்கும் அந்த பங்களா கடந்த 2008-ம் ஆண்டிலேயே 2.5 மில்லியன் ரிங்கிட் மதிப்பு கொண்டது. மேலும் அந்த பங்களாவில் பெரும்பான்மையான அளவில் மராமத்துப் பணிகள் வேறு நடந்துள்ளது”

“தற்போது அந்த பங்களாவின் விலை 6.5 மில்லியன் ரிங்கிட் என்று நிறைய பேர் கூறுகிறார்கள். ஆனால் லிம் அந்த பங்களாவை 2.8 மில்லியனுக்கே வாங்கியுள்ளார். எவ்வளவு மில்லியன் வித்தியாசம் பாருங்கள்?” என்று சபாருடின் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் ஊழல் செய்துவிட்டதாகக் கூறும் ஜசெக மற்றும் பினாங்கு மாநில அரசு இந்த விவகாரத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறது என்றும் சபாருடின் குற்றம் சாட்டியுள்ளார்.