Home Featured கலையுலகம் நடிகர் சங்க கிரிக்கெட் போட்டிக்கு அஜீத் கண்டிப்பாக வரவேண்டும் – நடிகர் சங்கம் தகவல்!

நடிகர் சங்க கிரிக்கெட் போட்டிக்கு அஜீத் கண்டிப்பாக வரவேண்டும் – நடிகர் சங்கம் தகவல்!

804
0
SHARE
Ad

ajith+600சென்னை – தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் தலைமையில் நடிகர்கள் ரமணா, உதயா, நடிகை லலிதா குமாரி ஆகியோர்  சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்  கமிஷனர் டி.கே.ராஜேந்திரனை சந்தித்துவிட்டு வெளியே வந்த நடிகர் நாசர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: நடிகர் சங்க நலனுக்காக நிதி திரட்டுவதற்காக நட்சத்திர கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 17-ஆம் தேதி நடக்கிறது. சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் போட்டி நடத்துவதற்கு அனுமதி கிடைத்துள்ளது. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.

மும்பை, கேரளா, ஆந்திரா போன்ற பிற மாநிலங்களைசேர்ந்த நடிகர்களும் கலந்துகொள்கின்றனர். ரசிகர்கள், மக்கள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கிறோம். நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு பாதுகாப்பு கேட்டு கமிஷனரிடம் மனு அளித்துள்ளோம்  என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

நடிகர் சங்க நலனுக்கான முக்கியமான நிகழ்ச்சி இது என்பதால், இந்நிகழ்சியில் கலந்துகொள்ள கமல், ரஜினி உள்ளிட்டோர் சம்மதம் தெரிவித்திருக்கிறார்களாம்.  நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டுப்போடக்கூட வராத அஜீத்  இந்நிகழ்ச்சிக்கு மட்டும் வருவாரா? என்கிற கேள்வி இருக்கிறது.

ஒட்டுமொத்த நடிகர்கள் நலன் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி என்பதால் எல்லா நடிகர்களும் கட்டாயம் கலந்துகொள்ளவேண்டும் என்று நடிகர்சங்கம் சார்பாகக் கேட்டுக்கொண்டிருக்கிறார்களாம். அதனால் அஜீத்தும் வருவார்  என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.