Home Featured உலகம் அமெரிக்காவில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

அமெரிக்காவில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

518
0
SHARE
Ad

earthquakeநியூயார்க் – அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் பலத்த நிலநடுக்கம் எற்பட்டதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. அலஸ்கா மாகாணத்தில் நிகழ்ந்த இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோளில் 6.2 ஆக பதிவானது.

உள்ளூர் நேரப்படி மாலை 5.35 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியன. கடலுக்கடியில் சுமார் 10 கீ.மீட்டர் ஆழத்தை மையமாகக்  கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க  புவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.