Home Featured நாடு வெயில் காரணமாக பள்ளி விடுமுறை தொடருமா? – அமைச்சு இன்று முடிவு!

வெயில் காரணமாக பள்ளி விடுமுறை தொடருமா? – அமைச்சு இன்று முடிவு!

683
0
SHARE
Ad

heat_wave_230515கோத்தா பாரு – நாட்டில் நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிப்பதா என்பதை கல்வியமைச்சு இன்று முடிவு செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை நிலவரப்படி, கெடா மற்றும் பெர்லிசில் உச்சக்கட்ட வெப்பமாக 39.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது என கல்வியமைச்சர் டத்தோஸ்ரீ மஹ்சிர் காலிட் தெரிவித்துள்ளார்.

மேலும், வெப்பநிலையைத் தொடர்ந்து அமைச்சு கண்கானித்து வருவதாகவும், வெப்பநிலை உயரும் பட்சத்தில் விடுமுறை அளிப்பது குறித்த முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice