ஹாவானா – நேற்று பிற்பகல் கியூபா தலைநகர் ஹாவானா வந்து சேர்ந்த ஒபாமா உடனடியாக தனது அதிகாரபூர்வ வருகைகளையும், சந்திப்புகளையும் மேற்கொண்டார்.
கம்யூனிச சித்தாத்தங்களைப் பின்பற்றிய காரணத்தால் மிகவும் பின்தங்கிப் போன நாடுகளுள் ஒன்று கியூபா. இந்தியாவின் அம்பாசிடர் கார்கள் போன்ற பழமையான கார்கள், தகரம், பலகைகளால் ஆன வீடுகள் – என இன்னும் பழமைக்குள் சிக்கிக் கொண்டிருக்கும் சூழலில் உள்ள ஹாவானா நகரின் பின்னணியில், அமெரிக்க அதிபர் ஒபாமாவை ஏற்றிக் கொண்டு, விமான நிலையத்தில் தரையிறங்கும் ஏர் ஃபோர்ஸ் 1 என்ற அமெரிக்க அதிபரின் பிரத்தியேக விமானம்…
மழைத் தூறல் காரணமாக, தனக்கும், மனைவிக்கும் சேர்த்து குடை பிடித்தவாறு வரலாற்றுபூர்வ கியூபா வருகையை மேற்கொள்ள – விமானத்தில் இருந்து வெளியே வரும் ஒபாமா…
கியூபா வருகை சரித்திரத்தில் இடம் பெறப் போகும் ஒன்று என்பதால், தனது இரண்டு மகள்களையும் இந்த முறை அழைத்து வந்துள்ளார் ஒபாமா. கூடவே மாமியாரையும்! அதாவது, ஒபாமாவின் மனைவி மிச்சல் ஒபாமாவின் தாயார் மரியான் ரோபின்சனும் இந்த முறை ஒபாமாவுடன் இந்த வருகையில் இணைந்துள்ளார்.
காரில் ஏறுவதற்கு முன்னால், தன்னைக் காணக் காத்திருந்த மக்களை நோக்கி கையசைக்கும் ஒபாமா..
ஹாவானாவின் பழமையான காலனித்துவ பகுதிகளுக்கு வருகை தந்த ஒபாமா குடும்பத்தினர், அங்கு மழை காரணமாக, வெள்ளம் வழிந்தோடிய சாலைகளில், சொந்தமாகக் குடை பிடித்து, நடந்து சென்றபோது…
ஹாவானாவின் பழைய நகர் பகுதியை மகளுடன் சுற்றிப் பார்க்கும் ஒபாமா…
சரித்திரப் பின்னணி கொண்ட ஹாவானாவின் இடங்களை மகள்களுக்கு சுற்றிக் காண்பித்து விளக்கம் தரும் ஒபாமா…
ஹாவானாவின் சாலைகளில் கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோ-ஒபாமா இருவரும் காணப்படும் பதாகைகள் வைக்கப்பட்டிருக்கின்றன.
ஒருகாலத்தில் அமெரிக்க கொடி கியூபாவில் பறக்க விடப்படுவதே தேசத் துரோகமாகப் பார்க்கப்பட்டது. ஆனால், இன்றோ, ஒபாமாவின் வருகையை முன்னிட்டு, ஹாவானாவின் இல்லங்களில் உள்ள மாடி முற்றத்தில் கியூபா- அமெரிக்க கொடிகள் இணைந்து பறக்கவிடப்படும் காட்சி….
-செல்லியல் தொகுப்பு
படங்கள்: நன்றி டுவிட்டர்