Home One Line P1 ரவுல் காஸ்ட்ரோ பதவி விலகல்- 6 தசாப்த ஆட்சி முடிவுக்கு வருகிறது

ரவுல் காஸ்ட்ரோ பதவி விலகல்- 6 தசாப்த ஆட்சி முடிவுக்கு வருகிறது

764
0
SHARE
Ad

ஹாவானா: கியூப கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ரவுல் காஸ்ட்ரோ பதவி விலகுவதாக கூறியுள்ளார். இது கடந்த ஆறு தசாப்தமாக காஸ்ட்ரோ குடும்பத்தின் ஆட்சியை முடித்து வைக்கிறது.

காஸ்ட்ரோ, 89, கட்சி மாநாட்டில் இளைய தலைமுறையினருக்கு தலைமையை ஒப்படைப்பதாகக் கூறியுள்ளார்.

அவரை தொடர்ந்து தலைமையை ஏற்க இருப்பவரைத் தேர்ந்தெடுக்க நான்கு நாட்கள் மாநாட்டின் முடிவில் வாக்களிப்பு நடத்தப்படும்.

#TamilSchoolmychoice

1959 புரட்சியில் தொடங்கிய அவரும், அவரது சகோதரர் பிடல் காஸ்ட்ரோவின் ஆட்சியை இது முடிவுக்கு கொண்டுவருகிறது.

“எனது தோழர்களின் வலிமை மற்றும் முன்மாதிரியான தன்மை, புரிதலை நான் தீவிரமாக நம்புகிறேன்,” என்று அவர் ஹவானாவில் கட்சி பிரதிநிதிகளிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

காஸ்ட்ரோ அடுத்து யார் தலைமையை ஏற்பார் என்று அறிவிக்கவில்லை என்றாலும், 2018- ஆம் ஆண்டில் தீவின் தலைவராக பொறுப்பேற்ற மிகுவல் தியாஸ்-கேனலுக்கு கட்சி தலைமை வழிவகுக்கும் என்று பரவலாக நம்பப்படுகிறது.