Home One Line P2 கியூபா: 43 ஆண்டுகளில் முதல் முறையாக பிரதமர் தேர்வு!

கியூபா: 43 ஆண்டுகளில் முதல் முறையாக பிரதமர் தேர்வு!

687
0
SHARE
Ad

ஹாவானா: கியூபா நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் மானுவல் மர்ரெரோ நாட்டின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 43 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பதவியை வகிக்கும் முதல் அதிகாரி என்ற பெருமையை அவர் பெற்றார்.

1976-ஆம் ஆண்டு முதல் குடியரசுக் கட்சி நிர்வாகத்தில் அப்பதவியை நீக்கியதற்குப் பின்னர், அதன் அதிபர் மிகுவல் டயஸ்கேனலின் உத்தரவின் பேரில் இந்த நியமணம் செய்யப்பட்டது.

இது கம்யூனிஸ்ட் கட்சியின் அரசாங்கத்தை பாதுகாக்கும் நோக்கில் பழைய அமைப்பிலிருந்து மாற்றுவதற்கான செயல்முறையின் ஒரு பகுதி என்பது புரிந்து கொள்ளப்படுகிறது.

#TamilSchoolmychoice

கடந்த 2004-ஆம் ஆண்டில் மறைந்த பிடல் காஸ்ட்ரோவின் கீழ், சுற்றுலா அமைச்சராக மானுவல் நியமிக்கப்பட்டார். மேலும் டயஸ்கேனல் நிர்வாகம் வரையில் இந்தப் பதவியில் அவர் நீடித்தார்.

இப்புதிய பிரதமர் பதவிக்கு, கியூப புரட்சித் தலைவர் ராமிரோ வால்டெஸ் உட்பட ஆறு துணை பிரதமர்கள் மர்ரெரோவுக்கு உதவ உள்ளனர்.