Home One Line P1 ஜோ லோ: நாட்டிற்கு கொண்டு வருவதில் சம்பந்தப்பட்ட நாடுகளின் காவல் துறை அதிகாரிகள் ஒத்துழைக்க மறுப்பு!-...

ஜோ லோ: நாட்டிற்கு கொண்டு வருவதில் சம்பந்தப்பட்ட நாடுகளின் காவல் துறை அதிகாரிகள் ஒத்துழைக்க மறுப்பு!- காவல் துறை

728
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சர்ச்சைக்குரிய தொழிலதிபர் ஜோ லோவை நாட்டிற்கு அழைத்து வருவதாக உறுதியளித்த காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் இன்று திங்கட்கிழமை தமது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பல நாடுகளில் உள்ள சக காவல் துறை அதிகாரிகள் மலேசியாவுடன் ஒத்துழைக்க மறுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், மலேசிய காவல்துறையினர் ஆதாரங்களை வழங்கிய போதிலும் ஜோ லோ தங்கள் நாட்டில் இருப்பதை அந்நாடு ஒப்புக்கொள்ள மறுப்பதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

நான் ஒரு வாரத்திற்கும் மேல் முயற்சிகள் செய்தேன், மேலும் முயற்சிகள் தொடரப்படும். நான் ஒருபோதும் கைவிடமாட்டேன். ஆனால், இரண்டு அல்லது மூன்று வழி உறவில் அல்லது வெளிநாட்டு காவல்துறையுடனான எங்கள் பலதரப்பு உறவில், நேர்மையை எதிர்பார்க்கிறோம்”

ஆனால், இது அப்படி இல்லை. இதுதான் என்னை ஏமாற்றமடையச் செய்துள்ளது. நான் அவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தும், பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை” என்று அவர் விளக்கினார்.

கடந்த காலங்களில் இந்த நாடுகளுடன் ஒத்துழைப்பை வழங்க மலேசியா மிகவும் தயாராக இருந்தது என்று அவர் கூறினார்.

இருப்பினும், இந்த நாடுகள் அவர் அங்கே இல்லை என்று கூறுகின்றன. ஆனால், அவர் அங்கே சென்ற தகவல்கள் எங்களிடம் உள்ளன.” என்று அவர் கூறினார்.