Home உலகம் கியூபா நாட்டின் புதிய தலைவர் – மிகல் டியாஸ் கேனல்

கியூபா நாட்டின் புதிய தலைவர் – மிகல் டியாஸ் கேனல்

530
0
SHARE
Ad

ஹாவானா: கியூபா நாட்டின் புதிய தலைவராக மிகல் டியாஸ் கேனல் (Miguel Diaz-Canel) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கம்யூனிஸ்ட் பாணியிலான ஆட்சியை நடத்தி வரும் நாடு கியூபா. அமெரிக்காவின் அண்டை நாடான கியூபா ரஷியா சார்பு நாடாக நீண்ட காலமாக இருந்து வருகிறது. பிடல் காஸ்ட்ரோ தலைமையில் அந்நாடு நீண்ட காலமாக இயங்கி வந்தது.

பிடல் காஸ்ட்ரோ மறைவுக்குப் பின்னர் அவரின் தம்பி ராவுல் காஸ்ட்ரோ தலைமையில் கியூபாவின் ஆட்சி தொடர்ந்தது. நாட்டை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் முதன்மைச் செயலாளர் என்ற அதிகாரம் மிக்க பதவியை ராவுல் காஸ்ட்ரோ வகித்து வந்தார்.

#TamilSchoolmychoice

கடந்த வாரம் தனது பதவி விலகலை ராவுல் அறிவித்தார். கடந்த அறுபது வருடங்களாக காஸ்ட்ரோ குடும்பத்தின் கைப்பிடியில் இருந்து வந்த கியூபாவின் ஆட்சி அதிகாரம் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.

காஸ்ட்ரோ, (வயது 89) கட்சி மாநாட்டில் இளைய தலைமுறையினருக்கு தலைமையை ஒப்படைப்பதாகக் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து திங்கட்கிழமை (ஏப்ரல் 19) நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் நடப்பு அதிபரான மிகல் டியாஸ் கேனல் கம்யூனிஸ்ட் கட்சியின் முதன்மைச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2018 முதல் மிகல் கியூபா அதிபராகப் பணியாற்றி வருகிறார்.

1959-இல் ஒரு புரட்சியின் மூலம் கியூபாவின் அதிகாரத்தை பிடல் காஸ்ட்ரோ கைப்பற்றினார். அவரின் மறைவுக்குப் பின்னர் அவரின் இளைய சகோதரர் ராவுல் காஸ்ட்ரோ கம்யூனிஸ்ட் கட்சியின் முதன்மைச் செயலாளராகப் பதவி வகித்தார்.

புதிய தலைவராகப் பொறுப்பேற்ற மிகல் நாட்டின் எல்லா முக்கிய விவகாரங்களிலும் ராவுல் காஸ்ட்ரோவின் ஆலோசனையும் கருத்துகளும் பெறப்படும் எனத் தெரிவித்தார்.