Home One Line P1 நிக்கி லியோவுடன் தொடர்பில்லாத 17 வீடுகள் சேதம்- காவல் துறை பதிலளிக்கும்!

நிக்கி லியோவுடன் தொடர்பில்லாத 17 வீடுகள் சேதம்- காவல் துறை பதிலளிக்கும்!

777
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தப்பியோடிய தொழிலதிபர் நிக்கி லியோ சூன் ஹீவுடன் தொடர்பில்லாத மொத்தம் 17 அடுக்குமாடி வீடுகள் கடந்த மாதம் அவருக்கு எதிராக நடத்தப்பட்ட சோதனையில் காவல் துறையினரால் நாசமாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

சிலாங்கூர் புச்சோங்கில் உள்ள ட்ரிகான் ரெசிடென்ஸில் வசிப்பவர்கள் தங்கள் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டதாகவும், இது குறித்து விளக்கமும் இழப்பீடும் கோரினர்.

#TamilSchoolmychoice

பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் மற்றும் அடுக்குமாடி உரிமையாளர்களில் ஏழு பேர் நேற்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர்.

சுபாங் ஜெயா நகராட்சி உறுப்பினர் ஜார்ஜ் யாப் கோக் வெங்கின் கூற்றுப்படி, உடைக்கப்பட்ட 17 வீடுகளுக்கு லியோவுடன் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார்.

“மொத்தம் 22 கதவுகள் உடைக்கப்பட்டன. அவற்றில் ஐந்து வீடுகள் லியோவுடன் தொடர்புடையவை. மீதமுள்ள 17 வீடுகளும் காவல்துறையினரால் சந்தேகிக்கப்பட்டன. எனவே அவை உடைக்கப்பட்டன,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

பாதிக்கப்பட்ட உரிமையாளரான “மேடம் சா”, அவர் தனது வீட்டை வாடகைக்கு விட்டிருப்பதாக தெரிவித்தார்.

காவல் துறை பரிசோதனையைப் பற்றி பக்கத்து வீட்டுக்காரர் சொன்னபோது, அவர் வீட்டிற்கு விரைந்ததாகவும், ஆனால் அதற்குள் வீடு உடைக்கப்பட்டு, வீட்டினுள் காவல் அதிகாரி ஒருவர் இருந்ததாகவும் தெரிவித்தார். .

மார்ச் 25 அன்று பூச்சோங் ஜெயா காவல் நிலையத்தில் சா இது குறித்து புகார் அளித்ததாகக் கூறினார்.
மேலும், ஏழு வீட்டுகளின் உரிமையாளர்களும் புகார் அளித்துள்ளனர்.

விசாரணைக்கு தலைமை தாங்கிய ஜோகூர் காவல்துறைத் தலைவர் அயோப் கான் மைடின் பிச்சையை தொடர்பு கொண்டபோது, ​​மலேசியாகினியிடம் இந்த விவகாரம் குறித்து இன்று ஓர் ஊடக அறிக்கையை வெளியிடுவதாகக் கூறியுள்ளார்.