Home One Line P2 இளவரசர் பிலிப்ஸ் இறுதி ஊர்வலம் ஆஸ்ட்ரோவில் நேரடி ஒளிபரப்பு

இளவரசர் பிலிப்ஸ் இறுதி ஊர்வலம் ஆஸ்ட்ரோவில் நேரடி ஒளிபரப்பு

721
0
SHARE
Ad

பிரிட்டன்: பிரிட்டனின் எலிசபெத் இராணியாரின் கணவர் இளவரசர் பிலிப்ஸ் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 9) தனது 99-வது வயதில் காலமானதை அடுத்து அவரது இறுதி ஊர்வலம்  நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளன.

பொதுவாக அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் உயிரிழந்தால் வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில்தான் (Westminster Hall) உடலை வைப்பார்கள். ஆனால், அங்கு தனது உடலை வைக்க வேண்டாம் என்று பிலிப் ஏற்கனவே கூறிவிட்டார்.

தனது மூதாதையர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் தன்னையும் அடக்கம் செய்ய வேண்டும் என்று அவர் ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, வின்ட்ஸர் காசல் (Windsor Castle) அரச மாளிகையின் ப்ரோக்மோர் (Frogmore) தோட்டத்தில் இளவரசர் உடல் நல்லடக்கம் செய்யப்படும்.

#TamilSchoolmychoice

இன்றிரவு ஆஸ்ட்ரோ அலைவரிசைகளில் பிலிப்ஸின் உடல் நல்லடக்கம் மேற்கண்ட வரைப்படத்தில் உள்ள நேரத்தில் ஒளிபரப்பாகும்.