Home One Line P2 ஸ்டாலின், குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்குப் பயணம்

ஸ்டாலின், குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்குப் பயணம்

1003
0
SHARE
Ad

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் ஓய்வெடுப்பதற்காக தனது குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் நான்கு நாட்கள் தங்கி ஓய்வெடுக்க திட்டமிடப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலையில் சென்னையில் இருந்து தனி விமானத்தில் தனது மனைவி, மகன் உதயநி ஸ்டாலின், மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், மருமகள் கிருத்திகா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் 16 பேருடன் அவர் புறப்பட்டு மதுரை வந்தடைந்தார்.

#TamilSchoolmychoice

கொடைக்கானலில் ஒரு தனியார் தங்கும்விடுதியில் குடும்பத்தினருடன் தங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினருடன் ஓய்வெடுக்க வந்திருப்பதால் கட்சியைச் சேர்ந்தவர்கள் யாரும் அவரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.