Home Featured இந்தியா டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணம்: இலங்கையை வென்றது மேற்கு இந்திய தீவுகள்!

டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணம்: இலங்கையை வென்றது மேற்கு இந்திய தீவுகள்!

693
0
SHARE
Ad

t20_slvswi_003பெங்களூர் – டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வென்றது. அந்த அணியின் பிளட்சர் 64 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.

டி20 உலகக் கோப்பையில் குரூப் 1-இல் இடம் பெற்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியும் நடப்பு சாம்பியனான இலங்கை அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நேற்று மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 122 ரன்களை எடுத்தது. மேற்கிந்திய தீவுகள் அணி வெல்ல 123 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை.

#TamilSchoolmychoice

பின்னர் களமிறங்கியது மேற்கிந்திய தீவுகள் அணி. 18.-ஆவது ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 127 ரன்களை எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது மேற்கிந்திய தீவுகள்.