Home Featured கலையுலகம் டுவிட்டரில் இரண்டு கோடி இரசிகர்களை பெற்றார் அமிதாப் பச்சன்!

டுவிட்டரில் இரண்டு கோடி இரசிகர்களை பெற்றார் அமிதாப் பச்சன்!

581
0
SHARE
Ad

amitabh-bhachchanமும்பை – பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனை டுவிட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை இரண்டு கோடியாக உயர்ந்தது.
அமிதாப் பச்சனை டுவிட்டரில் ஏராளமான திரையுலக பிரபலங்களும், லட்சக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு ரசிகர்களும் பின்தொடர்கின்றனர்.

இந்நிலையில், அவரது டுவிட்டர் இரசிகர்களின் எண்ணிக்கை இன்று இரண்டு கோடியாக உயர்ந்துள்ளதாக அமிதாப் தெரிவித்துள்ளார். ‘அடேங்ங்ங்கப்பா..’ இரண்டு கோடி! அனைவருக்கும் நன்றி, இனி 3 கோடியை நோக்கி.., ‘யுவர் டைம் ஸ்ட்ராட்ஸ் நவ்’ என்ற பதிவுடன் இந்த மகிழ்ச்சி தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் அமிதாப் பதிவிட்டுள்ளார்.

கடந்த 2010-ஆம் ஆண்டு டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் இணைந்த அமிதாப் பச்சன் அன்றிலிருந்து இன்றுவரை தனது இரசிகர்களுடன் அவ்வப்போது கலந்துறவாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

டுவிட்டரில் அமிதாப்-புக்கு அடுத்தபடியாக 1.86 கோடி இரசிகர்களுடன் நடிகர் ஷாருக் கான், 1.69 கோடி இரசிகர்களுடன் நடிகர் ஆமிர் கான், 1.68 கோடி இரசிகர்களுடன் நடிகர் சல்மான் கான்,  1.32 கோடி இரசிகர்களுடன் நடிகை பிரியங்கா சோப்ரா 1.30 கோடி இரசிகர்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.