Home Featured இந்தியா டி20 உலகக் கிண்ண கிரிக்கெட்: இந்திய-வங்காளதேச அணிகள் இன்று மோதுகின்றன!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட்: இந்திய-வங்காளதேச அணிகள் இன்று மோதுகின்றன!

596
0
SHARE
Ad

India-vs-Bangladeshபெங்களூரு – 6-ஆவது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், சூப்பர்-10 சுற்று முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்திய அணி தனது 3-ஆவது லீக்கில் இன்று (புதன்கிழமை) வங்காளதேச அணியுடன் மோதுகிறது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கும் இந்த ஆட்டத்தில் இந்திய அணி கட்டாயம் வென்றாக வேண்டும். அப்போது தான் அரைஇறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள முடியும்.

இந்திய அணியை பொறுத்தவரை துணை கேப்டன் விராட் கோலியைத்தான் பெரிதும் நம்பி இருக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிராக 55 ரன்கள் விளாசி கோலி வெற்றியை தேடித்தந்தார். ஆனால் இதை ஒரு வகையில் பலவீனம் என்றே வர்ணிக்க வேண்டும்.

#TamilSchoolmychoice

இவ்வாறான சூழலில், கோலி நிலைத்து நின்று கைகொடுக்காவிட்டால் அணியின் நிலைமை சிக்கலாகி விடும். எனவே வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்ரேட்டை உயர்த்த வேண்டும் என்று இந்திய கேப்டன் டோனி வலியுறுத்தியுள்ளார்.

இந்த தொடரில் பாகிஸ்தான், ஆஸ்திரேலிய அணிகளிடம் தோல்வி கண்ட வங்காளதேச அணி அரைஇறுதி வாய்ப்பை ஏறக்குறைய இழந்து விட்டது. இன்றைய ஆட்டத்தில் தோற்றால் முழுமையாக வெளியேறி விடும். எனவே வங்காளதேச வீரர்கள் முடிந்தவரை முழு மூச்சுடன் போராடுவார்கள். இரவு 9.30 மணிக்கு தொடங்குகிறது இந்த ஆட்டம்.