Home Featured உலகம் பிரசல்ஸ் தாக்குதல்: சந்தேக நபர் கைது – தற்கொலைப் படையினர் அடையாளம் காணப்பட்டனர்!

பிரசல்ஸ் தாக்குதல்: சந்தேக நபர் கைது – தற்கொலைப் படையினர் அடையாளம் காணப்பட்டனர்!

912
0
SHARE
Ad

பிரசல்ஸ் – பிரசல்ஸ் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு சகோதரர்களை பெல்ஜியம் புலனாய்வு அதிகாரிகள் விமான நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த புகைப்படக் கருவிகள் மூலம் அடையாளம் கண்டுள்ளனர்.

தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் காலிட் எல் பக்காரோய் மற்றும் பிராஹிம் பக்காரோய் என்ற இரு சகோதரர்கள் என்றும் அவர்கள் பிரசல்ஸ் நகரில் தங்கியிருந்தனர் என்றும், அவர்கள் ஏற்கனவே குற்றச் செயல்களைப் புரிந்தவர்கள் என்பது காவல் துறைக்கும் தெரிந்திருந்தது என்றும் தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அந்த இருவருடன் இருந்த மூன்றாவது சந்தேக நபர் பின்னர் விமான நிலையத்திலிருந்து வெடிகுண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் வெளியே ஓடிவிட்டான் என்றும் அவன் 25 வயதான நஜிம் லாச்சாரோய் (Najim Laachraoui) என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளான். நஜிம் சில நாட்களுக்கு முன்னால் பெல்ஜியம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சாலா அப்டிசலாமுடன் நேரடியாகத் தொடர்புடையவன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

Brussels-attacks-suspects

தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் பக்காரோய் சகோதரர்கள்…